உள்ளடக்கத்துக்குச் செல்

பிராசாத மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராசாத மாலை [1] என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் அவர்களால் இயற்றப்பட்டது.

பரம்பொருளை அடைவதற்குரிய நெறிகள் என்று இந்து சமயத்திலிலேயே பல்வேறு பிரிவுகள் பல்வேறு நெறிகளைக் காட்டுகின்றன.

உணவுப் பொருள்களைச் சாத(க)ம் செய்து உண்கிறோம்
அதுபோல,
பிராண வாயுவைச் சாத(க)ம் செய்து உடலுக்கு வலிமையாக்கிக்கொள்வது 'பிராசாதம்'
13-ஆம் நூற்றாண்டு

அவற்றுள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளை சிவஞான சித்தியார் காட்டியது. எனினும் ஞானநெறியை மட்டும் விரிவாகப் பேசியது.

14-ஆம் நூற்றாண்டு

தத்துவப் பிரகாசம் கிரியை நெறியை விரித்துரைக்கும் நூல்.

யோகம் என்னும் புலன்ஒடுக்கி

[தொகு]
  • சிவஞான சித்தியார் என்னும் யோகத்தைப் ‘புலனொடுக்கி’ எனக் குறிப்பிடுகிறது. [2] இந்த நூலில் கிரியையை விளக்கும் பாடல்கள் 6-ம், யோகத்தை விளக்கும் பாடல்கள் 18-ம் உள்ளன.
  • பதஞ்சலி வழியைப் பின்பற்றுவது அட்டாங்கயோகம். சைவம் இவற்றை யோக நெறியின் தொடக்கப் படிகள் எனக் கொள்கிறது.
  • சைவம் காட்டுவது பிரசாத யோகம். இதில் 16 கலை உறுப்புகள் உள்ளன.
  1. மேதை
  2. அருக்கீசம்
  3. விடகலை
  4. விந்து
  1. அர்த்த சந்திரன்
  2. நிரோதினி
  3. நாதம்
  4. நாதாந்தம்
  1. சத்தி
  2. வியாபினை
  3. வியோமரூபினி
  4. அனந்தை
  1. அனாசி
  2. ருதை
  3. சமனை
  4. உன்மனை

என்பன அவை.

  • பிராண வாயுவை இயங்கச் செய்வது பிராசாத யோகம்.
  • தத்துவப் பிரகாசம் என்பது அட்டாங்க யோகப் படிகளைக் கூறி அதற்கு மேல் இந்தப் பிரசாத யோகத்தையும் கூறும்.

பிராசாதம் பற்றிய தனிநூல்

[தொகு]
  • பிராகாச அகவல். காவை அம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. 14-ஆம் நூற்றாண்டு.
  • இதற்கு அம்பலவாண தம்பிரானின் மாணாக்கர் செய்த பழைய உரையும் உண்டு.
  • பிராரசாத தீபம், 15-ஆம் நூற்றாண்டு (37 விருத்தங்கள்)

இவை மிக விரிவானவை

பிராசாத மாலை என்னும் கமலை ஞானப்பிரகாசர் நூல் 11 எண்சீர் விருத்தங்களைக் கொண்ட நூல். சுருக்கமானது.

மூச்சுப் பயிற்சியின் 16 கலைகளுக்கும்

  1. பெயர்(நாமம்)
  2. மாத்திரை
  3. வியாபகம்
  1. அளவு
  2. சூனியம்
  3. வடிவு
  1. தேவதை
  2. தத்துவம்
  3. ஒளி

ஆகியவற்றைக் கூறுகிறது.

குறிப்பு

[தொகு]
  • வடமொழியில் பிராசாத ஷட்கம் என்னும் நூல் உள்ளது.
  • இதனை கமலை ஞானப்பிரகாசரின் மாணவர் குருஞான சம்பந்தர் தமிழில் 7 பாகங்களாக மொழிபெயர்த்துள்ளார்.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

[தொகு]
    • தருமை நாகலிங்கத் தம்பிரான் பதிப்பு, 1925
    • தரும்புர ஆதீன வெளியீடு, 1972
  1. பாடல் 273
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசாத_மாலை&oldid=1123329" இலிருந்து மீள்விக்கப்பட்டது